மிட்டாய் வீடு என்கிற கனவு இல்லம்






இது இன்றைய இளைஞர்களின் கனவு இல்லம். இந்த மாதிரி காதலை ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்கள் இன்னும் நிறைய இல்லை எனபது நிதப்சமான உண்மை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஆசையை "காதல்" என்று வருகையில் மட்டும் மறுப்பது ஏன் என்று தெரியவில்லை!. தங்கள் பிள்ளைகளுக்காக பார்த்து பார்த்து பலவற்றை செய்து வந்தவர்கள் கல்யாணமும் அவ்வாறே நடக்க வேண்டும் என்று நினைப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அந்த பிள்ளைகளின் ஆசையை ஏன் மறுக்க வேண்டும் என்று மறுப்பதற்கு முன் ஒரு நொடி கூட யோசிப்பதில்லை ஏன்?  சொந்தங்கள் என்ன சொல்லும்? ஊர் என்ன சொல்லும்? என்று அஞ்சும் அவர்களை எண்ணி என் மனம் வருந்துகிறது.ஊருக்காகவோ அல்லது சொந்தங்களுக்காகவோ பிள்ளைகளை பெற்றுக்கொள்ளவில்லை அவர்கள், அப்படி ஆசைபட்டு பெற்று கொண்ட பிள்ளைகளின் திருமணம் அவர்கள் ஆசைப்படி இல்லமால் ஊர் அல்லது சொந்தங்களின் ஆசைப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன நியாயம் என்று தெரியவில்லை! 
ஹ்ம். இனியாது காதலை மதங்கள், ஜாதிகள் தாண்டி ஆதரிப்போம். மனத்தை மட்டும் பார்க்கும் காதலை, பெற்றோர்கள் மனிதத்தை மட்டும் பார்த்து ஏன் சம்மதிக்க கூடாது ?  இது இன்றைய இளைஞர்களின் கோரிக்கை.

Comments

Popular posts from this blog

Dream