Popular posts from this blog
இ
பழ மொழி - சில அர்த்தங்கள் - 2
ஆயிரம் பேரை கொன்றால் அரை வைத்தியன்: ஒரு வைத்திய சாலையில் யாரோ ஒரு வைத்தியர் அதிகமாய் காசு வாங்கிய கடுப்பில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் சொல்லி வைத்துப் பின் நிரந்தரமாகிப் போன பழமொழி இது.. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் என்றால் முழு வைத்தியனாவதற்கு இரண்டாயிரம் பேரை அல்லவா கொல்ல வேண்டும். அவர் என்ன வைத்தியரா அல்லது எமனுக்கு மனித உயிர்களை எக்ஸ்போர்ட் செய்யும் பைத்தியமா ? ஆக இதல்ல உண்மையான பழமொழி ? உண்மையான விளக்கம் : ஆயிரம் வேரை கண்டவன் அரை வைத்தியன் என்பது இதன் உண்மையான வடிவம்.சோற்று கற்றாழை,கரிசலாங்கண்ணி,பொன்னாங்கண்ணி,கீழா நெல்லி போன்ற எண்ணற்ற தாவர வேர்களின் நோய் தீர்க்கும் பயனை கண்டறிந்து கொள்பவன் ஒரு முழுமையான மருத்துவருடைய அறிவில் பாதியை அடைகிறான் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி நாளடைவில் திரிந்து வேரை - பேர்களாகி கண்டவன் - கொன்றவன் என்றாகிவிட்டது...
Comments