Posts

Showing posts from November, 2010

பழ மொழி - சில அர்த்தங்கள் - 1

எறும்பு தின்னா கண்ணு நல்லா தெரியும் ? என்று பல பேர் சொல்ல கேட்டு இருப்போம். இது உண்மையா? இல்லை.  எறும்பு போன்ற கண் இல்லாத ஜீவன்களுக்கு உணவு அளித்துவிட்டு நாம் உணவு உட்கொண்டால் நாம் கண்களுக்கு நல்லது. இதுவே அதன் உண்மையான அர்த்தம்.

மிட்டாய் வீடு என்கிற கனவு இல்லம்

Image
இது இன்றைய இளைஞர்களின் கனவு இல்லம். இந்த மாதிரி காதலை ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்கள் இன்னும் நிறைய இல்லை எனபது நிதப்சமான உண்மை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஆசையை "காதல்" என்று வருகையில் மட்டும் மறுப்பது ஏன் என்று தெரியவில்லை!. தங்கள் பிள்ளைகளுக்காக பார்த்து பார்த்து பலவற்றை செய்து வந்தவர்கள் கல்யாணமும் அவ்வா றே நடக்க வேண்டும் என்று நினைப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அந்த பிள்ளைகளின் ஆசையை ஏன்  மறுக்க வேண்டும் என்று  மறுப்பதற்கு  முன் ஒரு நொடி கூட யோசிப்பதில்லை  ஏன் ?   சொந்தங்கள்  என்ன சொல்லும்?  ஊர் என்ன சொல்லும்? என்று அஞ்சும் அவர்களை எண்ணி என் மனம் வருந்துகிறது. ஊருக்காகவோ அல்லது சொந்தங்களுக்காகவோ  பிள்ளைகளை பெற்றுக்கொள்ளவில்லை அவர்கள்,  அப்படி ஆசைபட்டு பெற்று கொண்ட பிள்ளைகளின் திருமணம் அவர்கள் ஆசைப்படி இல்லமால் ஊர் அல்லது சொந்தங்களின் ஆசைப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன நியாயம் என்று தெரியவில்லை!  ஹ்ம். இனியாது காதலை மதங்கள், ஜாதிகள் தாண்டி ஆதரிப்போம்.  மனத்தை   மட்டும் பார்க்கும் காதலை, பெற்றோர்கள் மனிதத்தை மட்டும் பார்த்து ஏன் சம்மதிக்க கூடாது ?   இது இ

துபட்டா

துபட்டா எதற்கு பெண்களுக்கு ? கழுத்தை மறைபதற்கு ஹா !

ஒன்று தான்

கடவுளும் காதலும் ஒன்று தான் இரண்டும் இருப்பதே தெரியாது யாருக்கும்!

போதை

எப்போதை பொருளும் தராத போதை தருமே காதல் ஒன்று தான்.

கடவுள்

கடவுள் யார் ? எங்க இருக்கிறார் ? ஏனிந்த கேள்வி இன்று ? அறிவு,கல்வி,உறவுகள்,அன்பு, நட்பு போல் கடவுளும் நமக்கு சொல்லித் தரப்பட்டவையே!

எனது வாழ்க்கை பயணத்தில் - திருக்குறள்

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே  கெட்டான் எனப்படுதல் நன்று. பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு  ஊதியம் போக விடல்  உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்.

பொன் மொழிகள்

Image
சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள் 

காதலில் வெற்றி பெற்றவர்கள் யார் ... ஹும், காதலியின் மௌன மொழியை  மொழிபெயர்த்தவர்கள் போலும்!